உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக உள்ளதா? முருங்கைக் கீரையை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Rupa

உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக உள்ளதா? முருங்கைக் கீரையை இப்படி பயன்படுத்துங்க!
மூட்டு வலி என்பது தற்போதைய காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் இளம் வயதுடையவர்களுக்கும் ஏற்படுகின்றது. இந்த மூட்டு வலியை குணப்படுத்த நிறைய வகையான மருந்துகள் மாத்திரைகள் இருக்கின்றது. மேலும் தைலங்கள் முதல் ஆயில்மென்ட் வரை நிறைய மருந்துகள் இருந்தாலும் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மருந்துகளோ அல்லது சிகிச்சை முறைகளோ இன்னும் சரிவர அறியப்படவில்லை. இருப்பினும் இயற்கை மருத்துவத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் நிரந்தர தீர்வு இருக்கின்றது.
அந்த வகையில் மூட்டு வலியை குணப்படுத்த நாம் முருங்கைக் கீரையை பயன்படுத்தலாம். முருங்கைக் கீரை ஆண்மை விருத்திக்கு பயன்படும் அரு மருந்தாகும். இதை வைத்து மூட்டு வலிக்கு எவ்வாறு மருந்தாக பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* முருங்கைக் கீரை
* விளக்கெண்ணெய்
* காட்டன் துணி
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் விளக்கெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதில் எடுத்து வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்று வதக்க வேண்டும். நன்றாக வதக்கிய பின்னர் எடுத்து வைத்துள்ள காட்டன் துணியில் வதக்கி வைத்துள்ள முருங்கைக் கீரையை காட்டன் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூட்டு வலி உள்ள இடத்தில் இதை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி உடனே குணமாகும்.