மூட்டு கிட்ட அதிக வலியா இருக்கா? அப்போ 5 நிமிஷம் ஒதுக்கி இதை பண்ணுங்க வலியே வராது!!

Photo of author

By Divya

மூட்டு கிட்ட அதிக வலியா இருக்கா? அப்போ 5 நிமிஷம் ஒதுக்கி இதை பண்ணுங்க வலியே வராது!!

Divya

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மூட்டு வலி இருக்கிறது.மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்படுதல்,வயது காரணமாக மூட்டு வலி உண்டாகிறது.அதிக நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் முழங்கால் மூட்டு வலி வரும்.

இன்றைய தலைமுறையினர் பலர் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் எலும்புகள் வலிமை இழந்து வலி உண்டாகும்.நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,உடல் பருமன் போன்ற காரணங்களால் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும்.

மூட்டு வலி பாதிப்பிற்கு பல சிகிச்சை இருந்தாலும் சில வகை வீட்டு வைத்தியங்களும் நிவாரணமாக உள்ளது.மூட்டு பகுதியில் வலி இருந்தால் அதை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறும் பொழுது பெரிய பாதிப்பாக மாறிவிடும்.

இளம் வயதில் மூட்டு வலி வந்தால் முதுமை காலத்தில் நடப்பதில் சிரமமாகிவிடும்.மூட்டுகளை வலிமைப்படுத்த வேண்டியது நமது கடமை.நம் ஆரோக்கியத்தின் மீது நாம் அக்கறை செலுத்தினால் மட்டுமே வயதான காலத்தில் நோய்களை எதிர்த்து போராடும் சக்தி நமக்கு கிடைக்கும்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூலிகை பானங்கள் செய்து குடிப்பதன் மூலம் மூட்டு வலிமை அதிகரிக்கும்.யூரிக் அமிலத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

வெது வெதுப்பான தண்ணீரை கொண்டு மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.க்ரீன் டீ செய்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.ஆட்டுக்கால் சூப் செய்து குடித்து வந்தால் எலும்பு மஜ்ஜை வலிமை அதிகரிக்கும்.இதனால் மூட்டுகளுக்கு இடையே வலி ஏற்படாமல் இருக்கும்.

தினமும் ஒரு எண்ணெய் கொண்டு மூட்டு பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றை வைத்து மூட்டு பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.கல் உப்பை சூடாக்கி மூட்டு பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் தினமும் உடற்பயிற்சி செய்தால் மூட்டு பகுதியில் வலி குறையும்.அதேபோல் தினமும் ஐந்து நிமிடங்கள் நீங்கள் பின்னோக்கி நடந்தால் மூட்டு பகுதியில் வலி ஏற்படுவது கட்டுப்படும்.முன்னோக்கி நடப்பதைவிட பின்னோக்கி நடந்தால் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.