லொக்கு லொக்குனு இருமல் பாடாய் படுத்துகிறதா.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க அடுத்த நிமிடமே நின்றுவிடும்!!

Photo of author

By Rupa

Cough: எளிமையான முறையில் இருமலை குணப்படுத்துவது எப்படி??

பருவமழை மற்றும் குளிர் காலங்களில் சிறுவயது முதல் பெரியோர்கள் வரை அதிகப்படியாக சந்திப்பது காய்ச்சல் மற்றும் இருமல் தான். குறிப்பாக இருமலுக்கு பல வகையான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடனடியாக தீர்வு காண முடியாது. அச்சமயங்களில் இந்த வீட்டு வைத்தியமானது உங்களுக்கு கட்டாயம் கைகொடுக்கும்.

டிப்ஸ்: 01

தேவையான பொருட்கள்:
அதிமதுரம் 50 கிராம்
கரிசலாங்கண்ணி 50 கிராம்
சுக்கு 25 கிராம்
மிளகு 25 கிராம்
திப்பிலி 25 கிராம்
வெங்கார பற்பம் 20 கிராம்
மஞ்சள் 10 கிராம்

செய்முறை:
இவை அனைத்தையும் நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ள வேண்டாம்.
பின்பு நன்றாக தூளாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தூளை இரண்டு கிராம் என்ற அளவில் காலை இரவு என்று சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட இருமலும் குணமாகும்.

டிப்ஸ்: 02

மிளகு

சுடு தண்ணீரில் சிறதளவு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்து வர நல்ல பலன் அளிக்கும்.

டிப்ஸ் ௦3

தேன்

வறட்டு இருமலுக்கு தேன் ஓர் அருமருந்து. இதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடிட இருமல் குறையும்.

இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.