பல் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருக்கா? ரிலீஃப் கிடைக்க இந்த ஜெல்லை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருக்கா? ரிலீஃப் கிடைக்க இந்த ஜெல்லை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

Divya

உங்கள் ஈறுகள் பலவீனமாக இருந்தால் இரத்த கசிவு பிரச்சனை இருந்தால் அலட்சியம் செய்யாமல் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட காரணங்கள்:

**அலர்ஜி
**ஈறுகளை அழுத்தி பல் துலக்குதல்
**சிலவகை உணவுகள்
**ஈறு நோய்
**ஹார்மோன் மாற்றங்கள்
**வைட்டமின் குறைபாடு

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள்:

1)தேங்காய் எண்ணெய்

காலையில் எழுந்த பின்னர் தேங்காய் எண்ணெயை கொண்டு ஆயில் புல்லிங் செய்தால் பல் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.தேங்காய் எண்ணையில் கிராம்பு பொடி கலந்து பற்களை தேய்த்து கழுவினால் ஈறுகளில் கசிவு ஏற்படாமல் இருக்கும்.பல் கறைகள் உருவாவதும் தடுக்கப்படும்.

2)கற்றாழை ஜெல்

பிரஸ்ஸான கற்றாழை துண்டுகளை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்து
பல் ஈறுகளில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.

3)க்ரீன் டீ

தினமும் காலை நேரத்தில் க்ரீன் டீ செய்து பருகினால் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.க்ரீன் டீ கொண்டு வாய் கொப்பளித்தால் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.

4)கொய்யா இலைகள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை நன்றாக காய வைத்து பொடித்து பற்கள் தேய்த்து வந்தால் பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.கொய்யா இலை கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் வலிமையாகும்.

5)பூண்டு + இந்துப்பு

சிறிதளவு பூண்டு பற்களை இடித்து இந்துப்பு சேர்த்து பற்களை தேய்த்து வந்தால் கறைகள் உருவாவது கட்டுப்படும்.ஈறுகளின் வலிமை அதிகரிக்க பூண்டு பற்களை பயன்படுத்தலாம்.

6)சின்ன வெங்காயம்

வடித்த கஞ்சியில் இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை இடித்து போட்டு நன்றாக கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் இரத்த கசிவு வருவது கட்டுப்படும்.

7)வேப்பிலை

கசப்பு சுவை கொண்ட வேப்பிலையை பொடித்து பல் துலக்கி வந்தால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படாமல் இருக்கும்.