மோசமான உணவுகளால் உங்களின் வயிற்றுப் பகுதியில் தேங்கிய கெட்ட வாயுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வாய்விலங்கம் – 50 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விலங்கம் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
சிறிது நேரம் தண்ணீர் சூடானதும் வாய்விலங்கம் 10 கிராம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஓமம் – அரை தேக்கரண்டி
2)பெருங்காயம் – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் அரை தேக்கரண்டி ஓமம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கால் தேக்கரண்டி பெருங்காயத்தை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடித்து பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)பூண்டு பற்கள் – இரண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் ஒரு பல் பூண்டு போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த பூண்டு பானத்தை வடித்து தேன் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.