உங்களுக்கு தீராத சளி தொந்தரவு இருந்தால் நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய வழிமுறைகளை பின்பற்றலாம்.உங்களுக்கு இருக்கின்ற சளி பாதிப்பை சுக்கு,மிளகு ஆகிய பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:-
1)சுக்கு துண்டு
2)மிளகு
3)வெல்லம்
4)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு தோசைக்கல்லில் வைத்து சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.சுக்கு வாசனை வரும் வரை சூடாக்க வேண்டும்.
அதன் பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது ஒரு மிக்சர் ஜாரை எடுத்து வறுத்த சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த சுக்கு மிளகு பானம் சுண்டி கால் கப் அளவிற்கு வந்த பிறகு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இப்படி செய்தால் உடலில் இருக்கின்ற சளிக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)துளசி
2)கற்பூரவல்லி தழை
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 10 துளசி இலை மற்றும் இரண்டு கற்பூரவல்லி தழை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சளி பாதிப்பு குணமாகும்.
அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பருகினால் கெட்டியான சளி இளகி வரும்.