உங்களுக்கு தொண்டை வலி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த அண்ணாசி பூவை இப்படி பயன்படுத்துங்க!

Photo of author

By Rupa

இருமல் தொற்று அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு தொண்டை வலி இருக்கும். அது மட்டுமில்லாமல் தொண்டையில் புண்கள் இருந்தாலும் தொண்டை வலி ஏற்படும். இந்த தொண்டை வலி இருக்கும் பொழுது நம்மால் உணவை விழுங்க முடியாது. உணவு உண்ணும் பொழுது நமக்கு தொண்டையில் அதிகம் வலி ஏற்படும். தொண்டை எரிச்சல் ஏற்படும்.

தொண்டை வலி இருக்கும் சமயத்தில் அனைவரும் மருந்து மற்றும் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறோம். இந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் தற்காலிகமாக நமக்கு ஏற்படும் நோய் தொற்றுகளை குணப்படுத்தி மீண்டும் நோய் தொற்று ஏற்பட காரணமாக அமைகின்றது. எனவே நிரந்தரமாக தொண்டை வலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

* அண்ணாசி பூ

* பால்

செய்முறை:

முதலில் அண்ணாசி பழத்தின் பூக்களை எடுத்து வெயிலில் நன்கு உலரத்திக் கொள்ள வேண்டும். பூக்கள் நன்கு உலர்ந்த பின்னர் இதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலை ஊற்றி கொதிக்க வேண்டும். பால் கொதித்து வரும் பொழுது அரைத்து வைத்துள்ள அண்ணாசி பூவின் பொடியை சிறிதளவு பாலில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு பாத்திரத்தை இறக்க விடவும். பின்னர் இதை நாம் குடிக்கலாம். இதை தொடர்ந்து காலை, மாலை என்றா இரண்டு வேலை குடித்து வந்தால் தொண்டை வலி ஏற்படாது.