உங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

பருவமடைந்த பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பான ஒன்று.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் இந்த வெள்ளைப்படுதல் உண்டாகிறது.சளி,தயிர் போன்று இந்த வெள்ளைப்படுதல் இருக்கும்.இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விஷயம் என்றாலும் இதன் தீவிரம் அதிகமாக இருந்தால் நிச்சயம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,அதிகளவு வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில்,கருப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் அது நோய் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.வெள்ளைப்படுதல் என்பது கருப்பை வாய் மற்றும் உட்சுவரின் தசைப்பகுதியில் சுரக்கும் ஒரு திரவமாகும்.இந்த திரவம் பெண்களின் யோனிப் பகுதியை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளைப்படுதலுக்கான காரணங்கள்:

1)ஹார்மோன் மாற்றம்
2)மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை
3)பாலியல் உறவு
4)கர்ப்பம்
5)பூஞ்சைதொற்று
6)வைரஸ் தொற்று

அதேபோல் மஞ்சள் காமாலை நோய்,தைராய்டு,கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,காசநோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படும்.உங்களுக்கு துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோல் மஞ்சள் மற்றும் கெட்டியாக வெள்ளைப்படுதல் இருந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.யோனி பகுதியில் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அதை கவனிக்க வேண்டும்.உங்களுக்கு தொடர்ச்சியாக வெள்ளைப்படுதல் அதற்கான காரணம் என்னவென்று கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

துர்நாற்ற வெள்ளைப்படுதல் பூஞ்சை தொற்று இருப்தற்கான அறிகுறியாகும்.இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள் உடலுறவு கொள்ளும் பொழுது தங்களது ஆண் துணைக்கு பாதிப்பை உண்டு செய்யும்.பெண்கள் அனைவருக்கும் வெள்ளைப்படுதல் பொதுவான பிரச்சனைதான் என்றாலும் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கால தாமதம் செய்யாமல் அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.