இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்!

0
206

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்!

நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பவைகளில் ஒன்றுதான் உணவு. இந்த உணவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரும்புவதுண்டு. அந்த வகையில் காரமான உணவுகளை விரும்புவர்களுக்கு அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.

நம் உணவை காரமாக மற்றும் சிகப்பு மிளகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இது கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம் சிவப்பு மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் அதை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம்.

வயிற்றுப்புண்: சிவப்பு மிளகாய் மற்றும் மிளகாய் பொடியை அதிகம் நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது வயிற்றுப் புண்கள் ஏற்படும் இந்த நோய் உங்களுக்கு மிக ஆபத்தாகவும் அமையலாம் சிவப்பு மிளகாயில் உள்ள அப்லாடாக்சின் என்பது வயிற்றுப் புண்கள் கல்லீரல் அலர்ஜி மற்றும் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமான பிரச்சனை: சிவப்பு மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இவை செரிமான அமைப்பை எரிச்சல் படுத்தும். சிவப்பு மிளகாய் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது பசியின்மை ஏற்படும்.

குமட்டல் மற்றும் வாந்தி: சிவப்பு மிளகாய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வயிற்றுப்போக்கு ,வயிற்று வலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவைகள் ஏற்படும். எந்த ஒரு காரமான பொருட்களை நாம் உட்கொண்ட உடனடியாகவே ஐஸ்கிரீம் பாலாடை கட்டி அல்லது குளிர்ந்த பாலை உட்கொள்ள வேண்டும். மன அழுத்தம்: சிவப்பு மிளகாயை அதிகளவு சேர்த்துக் கொள்ளும் பொழுது நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!