இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்!

Photo of author

By Parthipan K

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்!

நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதற்கான அறிகுறிகள் நமக்கு முன்னதாகவே வெளிப்படும். ஆனால் நாம் நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தருகின்றோம். அறிகுறிகள் எதற்காக ஏற்படுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை.

அவ்வாறு செய்யும்பொழுது தான் நமக்கு அந்த பாதிப்பு அதிகமடைந்த அதிக பிரச்சனை ஏற்படுகின்றது. தற்போது இந்த பதிவின் மூலம் கிட்னி பாதிப்பு அடைந்திருந்தால் நமக்கு என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதனை காணலாம்.

பொதுவாக கல்லீரல் மற்றும் கிட்னி பாதிப்படைய தொடங்கும் பொழுது நமக்கு எந்த ஒரு அறிகுறியும் காண்பிப்பதில்லை. இந்த பாதிப்பு பல கட்டங்களாக தொடர்த பின்பு தான் அதற்கான அறிகுறிகள் நமக்கு வெளிப்படுகின்றது.

அறிகுறிகள்:உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவர்களிடம் சென்று உடலில் உள்ள பொட்டாசியம் அளவு மற்றும் பிஹெச் அளவை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அதன் பிறகு எப்பொழுதும் சோர்வு மனநிலையில் இருப்பது. அதனை அடுத்து கண்ணைச் சுற்றியுள்ள சதை பகுதிகள் வீக்கம் அடைதல். கால் வீக்கம் அடைதல். இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வருதல். அதன் பிறகு உணவு சுவைக்கும் பொழுதே வேறொரு சுவையை உணர்வது போன்ற அறிகுறிகள் கிட்னி பாதிப்படைந்துள்ளதற்கு ஏற்படும்.