உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது! 

0
210
Do you have all these symptoms? Then there is a high chance of having a heart attack!
Do you have all these symptoms? Then there is a high chance of having a heart attack!

மாரடைப்பு என்பது எந்த அளவு ஒரு கொடிய நோய் என்பது நமக்கு தெரியும். மாரடைப்பு ஏற்படுவதால் நம்முடைய உயிருக்குக் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இந்த மாரடைப்பு பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பதால் ஏற்படுகின்றது.

மேலும் இரத்த அழுத்தும், நாம் சாப்பிடக் கூடிய உணவுகள், சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் கொழுப்புகள் படிந்து கொள்வது போன்ற பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. எனவே மாரடைப்பு பற்றிய விழிப்புணர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில்  தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு என்பது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்புகள் படிந்து இதயத்திற்கு இரத்தம் செல்லாது. மேலும் இதயத்திற்கு கிடைக்கும் ஆக்சிஜன் இங்கு தடைபடுவதால் இதயத்தில் உள்ள இதய தசை சுவர்கள் இறப்பதால் இதயம் இயங்காமல் நின்று விடும். இதைத் தான் மாரடைப்பு என்கின்றோம். இந்த ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

* மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக நம்முடைய நெஞ்சுப் பகுதி ஊசியை வைத்து குத்துவது போன்று வலிக்கத் தொடங்கும். இந்த வலி வலப்பக்கம் அல்லது இடப்பகம் நெஞ்சில் ஏற்படும். இந்த வலி வந்து தொடர்ந்து இடது பக்கம் கை மற்றும் தோள்பட்டை முழுவதும் பரவும். இது ஒரு அறிகுறி ஆகும்.

* மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் நம்முடைய நெஞ்சு இறுக்கமாக இருக்கும். அதாவது நம்முடைய நெஞ்சில் அதிகமான எடையை வைத்தால் எப்படி இருக்குமோ அது போல இருக்கும். அல்லது கயிற்றை வைத்து நெஞ்சை கட்டினால் இருப்பது போல தோன்றுவது, மார்பு சுறுங்கி விரிவதே கடினமாக இருக்கும். இது போன்ற  உணர்வுகள் இருந்தால் மாரடைப்பு ஏற்படும்.

* மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதிக வியர்வை வெளியாகும். அதாவது நாம் வேலை செய்யும் பொழுது வியர்வை வெளியாவது என்பது சாதாரணமான ஒன்று. எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது அதிக வியர்வை ஏற்பட்டால் அது மாரடைப்புக்கான அறிகுறியாகும். அதாவது இதயத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக கிடைக்காமல் போகும் போது இதயம் சரி வர இயங்காது. இதயம் இயங்கவில்லை என்றால் உடல் முழுவதும் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும். இதனால் வியர்வை அதிமாக ஏற்படுகின்றது.

* மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். அதாவது இதயத்திற்கு இரத்தம் சரிவர கிடைக்காமல் இருக்கும் பொழுது இதயய் துடிப்பதன் வேகம் அதிகரிக்கின்றது. * மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக தொடர்ந்து தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், பேதி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதயம் சரியாக இயங்காத பொழுது உடலில் உள்ள மற்ற. உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக கிடைக்காது. அதே போல முறைக்கும் சரிவர கிடைக்கும் இரத்த ஓட்டம் சரிவர கிடைக்கவில்லை என்றால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதே போல செரிமான மண்டலத்திற்கும் சரிவர ஆக்சிஜன் கிடைக்காமல் செரிமானம் சரியாக நடக்காது. மேலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக பச்சை நிறத்தில் நுரை நுரையாக வயிற்றுப் போக்கு ஏற்படும். இவ்வாறு இருந்தாலும் மாரடைப்பு வரும்.

* நம்முடைய உதடுகள், கைகள் கால்களில் உள்ள நகங்கள் ஊதா நிறங்களில் காணப்படுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

* நம்முடைய கண்களில் மேகம் போல ஒரு வட்டம் உருவாகும். இது உருவானாலும் மாரடைப்பு ஏற்படும்.

* பல்சார்ந்த பிரச்சனைகள் அதாவது பற்களின் ஈறுகளில் பிரச்சனை, பல் வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் அறிகுறியாகும்.

* உடலில் பல இடங்களில் கொழுப்புச் கட்டிகள் ஏற்படுவதாலும் மாரடைப்பு ஏற்படும்.

Previous article5 ஏக்கர் நிலம் இருந்தால் 50 சதவீதம் மானியத்துடன் பம்பு செட்! தமிழக அரசு அறிவிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி! 
Next articleகேஸ் அடுப்பின் பர்னரில் கரியாக இருக்கின்றதா? அதை எளிமையான முறையில் நீக்க இந்த டிப்ஸ் பலோ பண்ணுங்க!!