சில காலமாகவே மொபைல் போன் திருடுவதன் மூலம் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கையும் திருட்டு கும்பல் அபேஸ் செய்து வருகின்றனர். பாஸ்வேர்ட் சுலபமாக நியாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் 1234..,abcd.., நம் பெயர் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் அல்லது பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து வருகின்றனர். இதனை ஈசியாக கண்டுபிடித்து விடும் திருட்டு கும்பல் மொபைல் போனை திருடியதோடு மட்டுமல்லாமல், வங்கி கணக்கையும் முழுவதும் வழித்து துடைத்து விடுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் இந்த கும்பல் மொபைல் போன்களை திருடி வர ஜார்க்கண்டை சேர்ந்த குழந்தைகளுக்கு கடுமையான பயிற்சி அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய ஓராண்டில் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல்களை திருடி உள்ளனர். மேலும் அவர்களின் பாஸ்வேர்டை ஏறக்குறைய கெஸ் செய்து அதனுடன் இணைப்பில் உள்ள வங்கிக் கணக்கையும் துடைத்து விடுகின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்துள்ளது. ஆகவே, பாஸ்வேர்டு போடுவதில் கவனம் அதிகம் செலுத்துமாறு பரிந்துரைத்து வருகின்றனர். கேப்பிடல் லெட்டர்ஸ், ஸ்மால் லெட்டர்ஸ், ஸ்பெஷல் கேரக்டர்ஸ் மற்றும் நம்பர்ஸ் இணைந்து கணக்கிட முடியாத பாஸ்வேர்டை அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் மிக கடினமான பாஸ்வேர்டு வைத்தால் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம். நோட் செய்து வைக்க முடியாது. அப்படி இருக்க இதற்கு என்னதான் வழி என்று புலம்பி வருகின்றனர்.