குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!..

Photo of author

By Parthipan K

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!..

Parthipan K

Do you have anything to complain about? Agriculture Minister MRK Panneerselvam Review!..

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!..

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
எம்.ஆர். கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் உள்ளது போல கர்நாடகா அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சில்லறை விலை விட தமிழகத்தில் அதிகமாக விலை உள்ளது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தவறான செய்தியாகும்.

உரத்தின் விலையானது மத்திய அரசால் மட்டுமே இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த போலி விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே. தமிழ்நாட்டில் போதிய அளவில் யூரியா மற்றும் உரங்கள் இருப்பதனால் கூடுதல் விலைக்கு  விற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

யூரியா பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளை தமிழக அரசு நிர்ப்பந்திக்கவோ மற்றும் கட்டாயப்படுத்துவோம் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்நிலையைப் போக்க முதன்மை தலைமையில் தமிழ்நாட்டின இயல்பு நிலைக்கு கொண்டு வர கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதில் நெல் தரிசில், பயறு வகைகள், சாகுபடி ஊக்குவிப்பு திட்டம் ,தோட்டக்கலை ,முதன்மை மாவட்டங்கள் மற்றும் இ-நாம் டெல்டா மாவட்டங்களில் உலர் கலங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்த புதிய திட்டமிட்டு அதை  செயல்படுத்தி வந்ததாக கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களை காவல்துறை மூலம் அனைத்தையும் முடக்கியது. அதன்படி விவசாயிகளை அடக்கி புறத்தள்ளி ஆட்சி நடத்தியவரே எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான். தற்போது விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அதிமுக பாடுபட்டு வந்ததும் மேலும் விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை யாரும் நம்பவே போவதில்லை.

இத்தகைய உண்மைக்கு புறமான அறிக்கையை வெளியிடுவதை இனிவரும் காலங்களிலாவது தவிர்த்து பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இனியாவது நடந்து கொள்ள வேண்டும் என எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.எனவே புறம் பேசும் செயலை விட்டு விட்டு நடப்பதை நினைவில் கூர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.