ஆஸ்துமா உங்களுக்கு இருக்கின்றதா… அப்போ இந்த கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள்… 

Photo of author

By Sakthi

 

ஆஸ்துமா உங்களுக்கு இருக்கின்றதா… அப்போ இந்த கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள்…

 

ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அந்த நோயை கட்டுப்படுத்தும் சிறப்பான இயற்கை முறையிலான கசாயத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த தற்பொழுது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆஸ்துமாவை கருப்பு ஏலக்காய் கட்டுப்படுத்தும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை.

 

கருப்பு ஏலக்காயில் ஆன்டி செப்டிக், ஆன்டிபாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை இருக்கின்றது.

 

இந்த சத்துக்கள் காரணமாக கருப்பு ஏலக்காய் நமக்கு ஆக்சிஜனேற்ற காரணியாக செயல்படுகின்றது. மேலும் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது.

 

சுவாசப் பாதையில் நுரையீரல் வழியாக எளிமையாக காற்று உள்ளே செல்லவும் வெளியே வரவும் எளிமையாக உதவி செய்கின்றது.

 

இருமல், சளி, தொண்டைப்புண் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் சுவாசப் பாதையில் இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவி புரிகின்றது.

 

கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்துமா என்று கேட்டால் இல்லை. இது மோசமான ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி எளிமையாக மூச்சு விட உதவி செய்யும். இதில் கசாயம் தயார் செய்து குடித்தால் நல்ல பயனை நாம் காணலாம்.

 

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கசாயத்தை செய்ய தேவையான பொருள்கள்…

 

* கிராம்பு

 

* கருப்பு ஏலக்காய்

 

* இஞ்சி துருவியது

 

* துளசி இலைகள்

 

கசாயம் செய்யும் முறை…

 

அடுப்பில் கடாயை வைத்து அதில் கிராம்பு, கருப்பு ஏலக்காய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

 

பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

பின்னர் இதில் எடுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.

 

பின்னர் இதை வடிகட்டி இளஞ்சூடாக வந்த பிறகு குடிக்கலாம். இந்த கசாயம் உங்களுக்கு இருக்கும் மோசமான ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்.