கண்களை சுற்றி கருப்பு மை பூசியது போன்று கருவளையம் உள்ளதா? மூன்று பொருட்களில் தீர்வு இருக்கு!!

Photo of author

By Divya

அதிக நேரம் மின்னணு சாதனங்களை பார்ப்பது,தூக்கமின்மை,மன அழுத்தத்தின் விளைவாக கண்களை சுற்றி கருவளையம் உருவாகிறது.இந்த கருவளைய பிரச்சனையை ஆண்கள் விட பெண்கள் தான் அதிகம் சந்திக்கின்றனர்.

கருவகளையம் வந்தால் கண்கள் பொலிவற்று காணப்படும்.இதனால் முகம் ஒரு சோர்வான தோற்றத்தை காட்டும்.இந்த கருவளையம் மறைய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.உருளைக்கிழங்கு,வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் காபி பவுடர் இருந்தால் கருவளையத்தை போக்கும் அருமையான க்ரீம் தயாரிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று
2)காபி பவுடர் – ஒரு தேக்கரண்டி
3)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று

பயன்படுத்தும் முறை:

*முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

*அடுத்து மிக்சர் ஜாரில் இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு விழுதாகும் வரை அரைக்க வேண்டும்.

*இந்த உருளைக்கிழங்கு விழுதை ஒரு டீ வடிகட்டியில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

*அடுத்து இந்த உருளைக்கிழங்கு சாறில் ஒரு தேக்கரண்டி காபி தூள் சேர்த்து ஸ்பூன் கொண்டு குழைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்னர் அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை போட்டு மீண்டும் ஒருமுறை கலந்துவிடுங்கள்.இந்த கலவை கண்களை சுற்றி அப்ளை செய்ய தயாராகிவிட்டது.

*இதற்கு முன்னர் ஒரு ஐஸ் கியூபை கண் கருவளையத்தில் மீது வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.பிறகு காட்டன் துணி பயன்படுத்தி கண்களை துடைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை கண்களை சுற்றி அப்ளை செய்து நன்றாக உலரவிட வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நினைத்து கண்களை சுற்றி ஒத்தி எடுக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் கருவளையம் தானாக மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கு சாறு கண் கருவளையத்தை மறைய வைக்க உதவுகிறது.கருவளையத்தில் உள்ள அழுக்குகள்,டெட் செல்கள் நீங்க உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தலாம்.வைட்டமின் ஈ மாத்திரை கண்களை சுற்றி பொலிவை உண்டாக்கும்.வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் நாள்பட்ட கருவளையம் மறைந்துவிடும்.