உங்களுடைய மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் இருக்கின்றதா? அதை மறைய செய்ய கொத்தமல்லி போதும்! 

Photo of author

By Rupa

உங்களுடைய மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் இருக்கின்றதா? அதை மறைய செய்ய கொத்தமல்லி போதும்!
நாம் அனைவரும் உடலின் ஆரோக்கியத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அது போலவே சருமத்தின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
 சருமத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழ் கரு வளையங்கள், முகப்பருக்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கரும்புள்ளிகள் என்பது நம்முடைய முகத்தில் தோன்றும். இது நம்முடைய. முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.
அந்த கரும்புள்ளிகள் பெரும்பாலும் கண்ணத்தில் தோன்றுகின்றது. இது நம்முடைய மூக்கை சுற்றிலும் ஏற்படும். இவ்வாறு மூக்கை சுற்றி ஏற்படும் கரும்புள்ளிகளை மறையச் செய்ய நாம் கொத்தமல்லியை பயன்படுத்தலாம். அது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* கொத்தமல்லி இலைகள்
* எலுமிச்சை சாறு
செய்முறை…
முதலில் கொத்தமல்லி இலைகளை எடுத்து அதை இடித்துக் கொள்ளவும். பின்னர் இடித்து வைத்துள்ள கொத்தமல்லியில் இருந்து கொத்தமல்லி சாறு எடுத்து தனியாக ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எலுமிச்சம் பழம் எடுத்து அதிலிருந்து எலுமிச்சை சாற்றை அந்த பவுலில் சிறிதளவு பிழிந்து விட வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்துவிட்டு மூக்கை சுற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.