அந்தரங்க பகுதியில் தொடர் அரிப்பா இருக்கா.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

அந்தரங்க பகுதியில் தொடர் அரிப்பா இருக்கா.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

ஆண்,பெண் அனைவரும் தங்களது அந்தரங்க பகுதியில் ஏற்படும் தொற்றுகளால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில் பிறப்புறுப்பு பகுதியில் அதிகளவு அரிப்பு ஏற்பட வாய்பிருக்கிறது.

பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியின் போது பிறப்புறுப்பில் அரிப்பு,எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதனால் அசௌகரியமான சூழல் மற்றும் அதிக வலியை உண்டாக்கலாம்.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஈரமான உள்ளாடைகளை அணிதல்,சிறுநீர் கழித்த பின்னர் பிறப்புறுப்பை சுத்தம் செய்யாதிருத்தல் போன்ற காரணங்களால் அந்த இடத்தில் அரிப்பு,எரிச்சல் உண்டாகிறது.இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் குணமாக்கி கொள்ளலாம்.

பிரஸ் கற்றாழை ஜெல்லை பிறப்புறுப்பில் அரிப்பு,எரிச்சல் ஏற்பட்டிருக்கும் இடத்தில் அப்ளை செய்தால் சில மணி நேரத்தில் அவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.

கற்றாழையில் இருக்கின்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அரிப்பு,எரிச்சலை குணமாக்க உதவுகிறது.

சுத்தமான தேங்காய் எண்ணெயை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்தால் அரிப்பு,வீக்கம்,எரிச்சல் அனைத்தும் குணமாகும்.தேங்காய் எண்ணெயில் இருக்கின்ற ஆண்டிமைக்ரோபியல் பிறப்புறுப்பில் ஏற்படுகின்ற அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயின் சில துளிகளை தேயிலை மர எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து நீரில் கலந்து குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அந்தரங்க அரிப்பு,எரிச்சல் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை நன்கு மிக்ஸ் செய்து பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்தால் அரிப்பு,எரிச்சல் குணமாகும்.