தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.காய்கறி,பழங்கள்,மாவு,மீந்து போன சாதத்தை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகத்தை விளைவிக்கும்.
இந்த காலத்தில் பிரிட்ஜ் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு சாதனமாக பார்க்கப்படுகிறது.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர்.பிரிட்ஜ் தங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதால் இல்லத்தரசிகளின் விருப்ப பொருளாக இது திகழ்கிறது.
பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள் பிரஸாக இருக்கும் என்றாலும் அதை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.சிலப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் ஆரோக்கிய தன்மை குறைந்துவிடும்.
குறிப்பாக பழங்களை வெட்டிய நிலையில் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நமக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக குறைந்துவிடும்.நறுக்கிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதில் பாக்டீரியா தொற்றுகள் உருவாகிவிடும்.
வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை முழுமையாக நீங்கிவிடும்.பிரிட்ஜில் வெட்டிய நிலையில் வைத்த பழங்களை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.
கொய்யாப் பழம்,வாழைப்பழம்,ஆப்பிள் போன்றவற்றை வெட்டிய நிலையில் பிரிட்ஜில் வைத்தால் அதில் பாக்டீரியாக்கள் பாக்டீரியா தொற்றுகள் அதிகமாகிவிடும்.வெட்டிய நிலையில் உள்ள பழங்களை பிரிட்ஜில் வைத்தால் மற்ற உணவுப் பொருட்களின் வாசனை அதில் புகுந்து சுவைக்க ஏற்பற்றதாக மாறிவிடும்.எனவே இனி வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிரித்துக் கொள்ளுங்கள்.