உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருக்கின்றதா!!? அதை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகள்!!!

0
101
#image_title

உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருக்கின்றதா!!? அதை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகள்!!!

நம்மில் எல்லாருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனையான பொடுகுத் தொல்லை பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமான மூன்று எளிய இயற்கை வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொடுகு நம் தலையில் இருந்தால் நம் தலைக்கு பல பாதிப்புகளை கொடுக்கின்றது. தலையில் சொறி, புண் போன்றவற்றை இந்த பொடுகு ஏற்படுத்துகின்றது. மேலும் முடி உதிர்தல் பிரச்சனையையும் பொடுகுத் தொல்லை ஏற்படுத்துகின்றது. நம் தலைக்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொடுகுத் தொல்லையை குணப்படுத்த இந்த பதிவில் சில எளிமையான மூன்று வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொடுகுத் தொல்லையை குணப்படுத்த வழிமுறை 1:

பொடுகுத் தொல்லையை குணப்படுத்த நாம் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். அதாவது தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை தலையின் வேர் வரை மெதுவாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் கைகளால் உச்சந்தலையை மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழிந்து உங்கள் தலையை கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு வழிமுறை 2:

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு தயிரை நாம் பயன்படுத்தலாம். தயிர் நம் வயிற்றுக்கு மட்டும் நல்லது அல்ல. தலைமுடிக்கும் பல பயன்களை அளிக்கின்றது. பொடுகுத் தொல்லை அதிகம் உள்ள நபர்கள் தயிரை தலைக்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரால் தலையை கழுவ வேண்டும். இதன் மூலமாக பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வழிமுறை3:

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு வேப்பிலையை பயன்படுத்தலாம். வேப்பிலையை சருமத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தலை முடிக்கும் அதிக பயன்களை தருகின்றது. பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வேப்பிலையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் பொடுகுத் தொல்லை சரியாகும்.

Previous articleயாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!
Next articleஇந்த அறிகுறிகள் இருந்தால் இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கும்!!! என்ன அறிகுறிகள் என்ன நோய்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!