கண்களை சுற்றி கருமை நிற வட்டம் உள்ளதா? இதை மறைய வைக்கும் பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!!
இன்று பலரும் கருவளையப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.என்னதான் மேக்கப்போட்டு தங்களை அழகுபடுத்தினாலும் கண்களை சுற்றி ஓவல் ஷேப்பில் காணப்படும் கருவளையம் அழகை குறைத்துகாட்டிவிடும்.எனவே கருவளையத்தை மறைய வைக்க இந்த அழகு குறிப்புகளை செய்து வாருங்கள்.
முதல் தீர்வு:
1.வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
2.தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்து நன்றாக ஓய்வெடுக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நினைத்து கண்களை சுற்றி தேய்த்தெடுக்கவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் கருவளையம் நாளடைவில் காணாமல் போய்விடும்.
இரண்டாவது தீர்வு:
1.மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2.சந்தனத் தூள் – ஒரு தேக்கரண்டி
3.ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி
முதலில் மஞ்சள் மற்றும் சந்தனத் தூளை கிண்ணத்தில் கொட்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு இதை கண்களை சுற்றி அப்ளை செய்து நன்றாக உலரவிடவும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி கண்களை சுற்றி சுத்தம் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் நீங்கிவிடும்.
மூன்றாவது தீர்வு:
1.உருளைக்கிழங்கு – ஒன்று
2.சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக சீவிக் கொள்ளவும்.பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கண்களை சுற்றி அப்ளை செய்து உலரவிட்டு சுத்தம் செய்தால் கருவளையம் சில நாட்களில் மறைந்துவிடும்.
நான்காவது தீர்வு:
1.கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2.தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.
சில மணி நேரம் கழித்து கண்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.