சூடு பிடுச்சி சொட்டு சொட்டாக யூரின் வருகிறதா? இதற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வு இதோ!!

Photo of author

By Divya

சூடு பிடித்து சொட்டு சொட்டாக யூரின் வருகிறதா? இதற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வு இதோ!!

உடல் சூடு அதிகமானால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் ஏற்படும்.அது மட்டுமின்றி விட்டு விட்டு சிறுநீர் வெளியேறும்.இவை வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பாதிப்பாகும்.சூடு பிடித்துக் கொண்டால் பிறப்புறுப்பு பகுதியில் ஒரு வித வலி ஏற்படும்.அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

சிலர் பிற்புறப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வார்கள்.இதனால் சூடு தணிந்து எப்பொழுதும் போல் சிறுநீர் வெளியேறும்.நமது உடல் பல காரணங்களால் சூடாகிறது.

உடலில் போதிய நீர் இல்லாமை,சிறுநீர் தொற்று,உடல் உஷ்ணம்,நீண்ட நேரம் சிறுநீர் அடக்கி வைத்தல்,சூடான இடத்தில் அமருதல் ஆகியவை உடல் சூடாவதற்கான காரணங்கள் ஆகும்.

உடல் சூட்டை தணிய சிறுநீர் பிரச்சனை சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

சூடு பிடித்துக் கொண்டால் விளக்கெண்ணெயை பாதாம்,தொப்புள் பகுதியில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடலில் சூடு வெளியேறும்.இதனால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் ஏற்படுவது சரியாகும்.

தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.இவ்வாறு செய்வதால் உடல் சூடு தணியும்.சிறுநீரகத்தில் உள்ள தொற்றுக் கிருமிகள் சிறுநீர் மூலம்’வெளியேறி விடும்.அது மட்டுமின்றி சூடான சிறுநீர் வெளியேறுவது தடுக்கப்படும்.

வயிறு மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையில் வலி ஏற்பட்டால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து சரி செய்யலாம்.

உடல் சூட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை தவிர்த்து உடலை குளுமையாக்கும் இயற்கை பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்கள்,காய்கறிகள் சிறுநீரகத்தில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது.