சொட்டு சொட்டாக சிறுநீர் வருதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து பலன் பெறுங்கள்!!

Photo of author

By Divya

சொட்டு சொட்டாக சிறுநீர் வருதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து பலன் பெறுங்கள்!!

Divya

உங்கள் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்கி வெளியேறாமல் இருந்தால் அதிக எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும்.சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இஞ்சி,பூண்டு போன்றவற்றை கொண்டு தேநீர் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகுங்கள்.இந்த இஞ்சி பானம் சிறுநீரகக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு பல் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

இந்த பூண்டு பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கழிவுகள் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

கிளாஸ் ஒன்றில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்குங்கள்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி கலந்து பருகினால் சிறுநீரக கழிவுகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பீன்ஸ்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பாத்திரத்தில் இந்த பீன்ஸ் துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.இந்த பீன்ஸ் பானத்தை வடித்து பருகினால் சிறுநீரக கழிவுகள் முழுமையாக வெளியேறும்.