உங்களுக்கு விந்து முந்துதல் பிரச்சனை இருக்கா? நைட் இந்த பாலை குடுச்சிட்டு படுங்க!!

Photo of author

By Divya

இக்காலத்தில் ஆண்கள் முக்கூட்டியே விந்து முந்துதல் பிரச்சனையை சந்திப்பது அதிகரித்து வருகிறது.விந்து முந்துதல் பிரச்சனையால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல ஆண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விந்து முந்துதல் பிரச்சனை தொடர்ந்தால் பாலியல் ஈர்ப்பில் நாட்டமில்லாமல் போய்விடும்.விந்து முந்துதலை தடுக்க பாலியல் செயல்பாடு மேம்பட ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1.பால்
2.பாதாம் பருப்பு
3.முந்திரி பருப்பு
4.ஜாதிக்காய்
5.ஏலக்காய்
6.பனங்கற்கண்டு அல்லது தேன்
7.அமுக்கரா கிழங்கு

செய்முறை:-

50 கிராம் பாதாம் பருப்பு மற்றும் 50 கிராம் முந்திரி பருப்பை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.அதன் பிறகு ஒரு ஜாதிக்காயை வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆறவிடவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,ஜாதிக்காய் சேர்க்கவும்.தொடர்ந்து 20 கிராம் அமுக்கரா கிழங்கு,ஒரு ஏலக்காய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிளாஸ் பாலை கொதிக்க வைத்து அரைத்த சூரணம் 15 கிராம் சேர்த்து குடித்தால் விந்து முந்துதல் பிரச்சனை சரியாகும்.

விந்து முந்துதலுக்கு மற்றுமொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1.அஸ்வகந்தா
2.பூனைக்காலி

செய்முறை:-

நாட்டு மருந்து கடையில் 50 கிராம் அஸ்வகந்தா மற்றும் 50 கிராம் பூனைக்காலி விதை வாங்கிக் கொள்ளவும்.பிறகு இரண்டையும் பக்குவமான முறையில் பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த அஸ்வகந்தா மற்றும் பூனைக்காலி பொடி ஒரு ஸ்பூன் அளவு அதில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் விந்து முந்துதல் பிரச்சனை சரியாகும்.