அதிக நேரம் மொபைல்,லேப்டாப் பயன்படுத்துதல்,நீண்ட நேரம் படித்தல்,தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காரணங்கள் கண் வலி,பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
கண் வலிக்கான காரணங்கள்:
1)ஒவ்வாமை
2)அதிக மின்னணு சாதன பயன்பாடு
3)வைட்டமின் குறைபாடு
4)வயது முதுமை
5)சைனஸ் பிரச்சனை
கண் வலி அறிகுறிகள்:
1)கண் குத்துதல் உணர்வு
2)தலைவலி
3)கண் எரிச்சல்
4)கண் பார்வை மங்குதல்
5)கண் சிவத்தல்
6)கண் துடித்தல்
தீர்வு 01:
*இஞ்சி – ஒரு துண்டு
*புதினா இலை – ஐந்து
*கரு மிளகு – இரண்டு
*வெல்லம் – ஒரு துண்டு
*தண்ணீர் – 100 மில்லி
பாத்திரம் ஒன்றில் 100 மில்லி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு தட்டி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து ஐந்து புதினா இலைகளை பாத்திர தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு கரு மிளகை இடித்து தூளாக்கி போட்டு அடுப்பில் வைத்து குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.
பிறகு ஒரு துண்டு வெல்லம் கரையவிட்டு பானத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.இந்த பானத்தை காலை நேரத்தில் எழுந்தவுடன் கண்களை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு பருக வேண்டும்.தொடர்ந்து 30 தினங்கள் பருகி வந்தால் கண் வலி,கண் அழுத்தப் பிரச்சனை சரியாகும்.
தீர்வு 02:
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த பானத்தை ஆறவைத்து வேறொரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சு எடுத்து சீரக நீரில் போட்டு ஊறவைத்து கண்களை சுற்றி அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.
தீர்வு 04:
*மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
*படிகாரத் தூள் – ஒரு தேக்கரண்டி
பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி படிகாரத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த நீரை கொண்டு முகத்தை கழுவினால் கண் வலி,கண் அழுத்தம் குணமாகும்.
தீர்வு 05:
*நல்லெண்ணெய் – 20 மில்லி
*அருகம்புல் பொடி – கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய்யை சிறிது சூடாக்கி ஆறவைக்க வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி அருகம்புல் பொடி போட்டு நன்றாக மிக்ஸ் செய்து தலையில் அப்ளை தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.
பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு தலையை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இதை செய்தால் கண் சூடு,கண் அழுத்தம்,கண் எரிச்சல் குணமாகும்.