உயிருக்கு ஆபத்தான தொற்றா நோய்களில் முதல் இடம் வகிப்பது இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் தான்.கடந்த 10,15 வருடங்களுக்கு முன்பு வயது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டுமே இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டது.
ஆனால் தற்போதைய சூழலில் இதய நோய் அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.திடீர் நெஞ்சு வலி,மார்பில் ஊசி கொண்டு கூர்மையாக குத்துதல் போன்ற உணர்வு,நெஞ்சு அழுத்தம்,மார்பு தசை பிடிப்பு,வாயு பிடிப்பு போன்ற காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
ஆனால் எல்லா பாதிப்புகளும் நெஞ்சு வலியாக இருக்க வாய்ப்பில்லை.அதேபோல் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால் வாயு பிடிப்பு என்று அலட்சியம் கொள்ளக் கூடாது.நெஞ்சு பகுதியில் உள்ள எலும்பு மற்றும் தசையால் வலி ஏற்படுகிறது.சம்மந்தபட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்கும் பொழுது அவ்விடத்தில் அதிக வலி ஏற்படும்.
இதுபோன்ற கூர்மையான வலி உணர்வு இருக்கும் பொழுது குனிதல்,தும்புதல் போன்றவை நிகழ்ந்தால் வலி அதிகமாகும்.நெஞ்சு வலி வராமல் இருக்க ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
பாதாம் பருப்பு – 10
பால் – ஒரு கிளாஸ்
பாதாம் பருப்பை பொடித்து சூடான பாலில் கலந்து பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் தினமும் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
செம்பருத்தி பூ பொடி – ஒரு தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி செம்பருத்தி பூ பொடி போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
மாதுளை சாறு
தினமும் ஒரு கிளாஸ் மாதுளை சாறு பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.மார்பில் ஊசி குத்தல் உணர்வு ஏற்படுவது குறையும்.
இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.