அடிக்கடி தலைவலிக்கிறதா? இந்த விதைகளை கொதிக்க வைத்து குடித்தால் தலைவலி சட்டுனு குறையும்!!

0
151
Do you have frequent headaches? If you boil these seeds and drink them, your headache will go away quickly!!
Do you have frequent headaches? If you boil these seeds and drink them, your headache will go away quickly!!

தலைவலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகளில் ஒன்று.சிலருக்கு அதீத தலைவலி பிரச்சனை இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.இந்த தலைவலி பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்கள் தங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:

1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)ஏலக்காய் – ஒன்று
3)ஓமம் – அரை தேக்கரண்டி
4)புதினா இலை – ஐந்து
5)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி போட்டு சில நொடிகள் வறுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிடவும்.பிறகு அதே வாணலியில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு லேசாக வறுத்து ஆறவிடவும்.

அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் வறுத்த கொத்தமல்லி விதை மற்றும் ஓமம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

அதன் பின்னர் ஒரு ஏலக்காயை இடித்து அதில் போடவும்.பிறகு ஐந்து புதினா இலைகளை போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்தால் தலைவலி மாயமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)இஞ்சி
2)தேன்

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 100 முதல் 150 மில்லி வரை தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சை எடுத்து தோல் நீக்கி உரலில் போட்டு தட்டவும்.இதை சூடாகி கொண்டிருக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து குடித்தால் அதீத தலைவலி நீங்கும்.தலைவலி அதிகமானால் ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி சிறிது துளசி,கற்பூரம் சேர்த்து ஆவி பிடித்தால் தலைவலிவிடும்.

Previous articleஅடேங்கப்பா! சாதம் வடித்த பின் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
Next articleஇடது மார்பில் சுள்ளுனு வலிக்கிறதா? அப்போ கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி சரி செய்யுங்கள்!!