உங்க கிட்ட பூண்டு இருக்கா? அப்போ பேன் தொல்லை ஒழிய இவ்வாறு செய்யுங்கள்!! நிரந்தர தீர்வு இது தான்!!
தலை முடிகளை மிகவும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும்.ஒருவேளை பராமரிக்க தவறினால் நிச்சயம் பேன்,பொடுகு,அரிப்பு உள்ளிட பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்ற முடியும் கொட்டும் சூழல் ஏற்பட்டு விடும்.வாழ்க்கையில் ஒரு முறையாவது பேன் பாதிப்பை சந்தித்து இருப்போம்.இந்த பேன்கள் மண்டையில் இருக்கும் அழுக்கு மற்றும் ரத்தத்தை உறிந்து உயிர் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது.இதை நம் தலைகளில் இருந்து வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று நினைத்து ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி முடி வளர்ச்சியை நாம் கெடுத்து கொள்கிறோம்.ஆனால் பேன்,பொடுகு,ஈறு தொல்லை நீங்க இயற்கை முறையில் பல்வேறு தீர்வுகள் இருக்கிறது.அதில் ஒரு தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இதை முறையாக பாலோ செய்து பலனை அடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*பூண்டு – 6 பற்கள்
*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1.முதலில் 6 பற்கள் பூண்டு எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.
2.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.
3.பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.
4.அதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
5.அதன் பின் 1 தேக்கரண்டி விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
6.இதை தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முடிகளின் வேர் பகுதியில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும்.பிறகு ஏதெனும் ஒரு ஷாம்பு போட்டு தலையை நன்கு அலச வேண்டும்.இப்படி செய்தால் ஒரே வாரத்தில் பேன்,பொடுகு,ஈறு பிரச்சனைகள் சரியாகி விடும்.
மற்றொரு முறை:-
தேவையான பொருட்கள்:-
*வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
*பூண்டு – 5
*கற்பூரம் – 2
*தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
செய்முறை:-
1.ஒரு கைப்பிடி அளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்பிலையை எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும்.
2.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
3.எண்ணெய் சூடேறியதும் அதில் உலர்த்தி வைத்துள்ள வேப்பிலையை சேர்த்து கொள்ளவும்.
4.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பூண்டு பற்களை சேர்த்து அரைக்கவும்.
5.அதை கொதித்து கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய் + வேப்பிலையில் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
6.பின்னர் அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் 2 சேர்த்து கரைத்து கொள்ளவும்.
இவை ஆரிய பிறகு முடிகளில் வேர்களின் படும் படி நன்கு மஜாஜ் செய்து 45 நிமிடங்கள் காத்திருந்து பின் ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும்.
இப்படி தொடர்ந்து செய்து வர முடி உதிர்தல்,பேன்,ஈறு,பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.