கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

0
150

கை கால் மூட்டு வலி இருக்கின்றதா?? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது.

இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி ஆகியவற்றிற்கு நம் உடலில் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, சில வைட்டமின்களின் (வைட்டமின் டி3) பற்றாக்குறை நமக்கு உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முறையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி மருத்துவரை அணுகாமலேயே மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள்.

ஆனால் அது மிகவும் தவறானது. அதைவிட எந்தவித பக்க விளைவுகளும் இன்றி இதனை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

பட்டை

கிராம்பு

ஓமம்

வெந்தயம்

பூண்டு

கருப்பு எள்ளு

நல்லெண்ணெய்

வேப்ப எண்ணெய்

செய்முறை

1: முதலில் பட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை சிறிது சிறிது துண்டுகளாக உடைத்துக் கொள்ள வேண்டும்.

2: பிறகு ஒரு விரலில் உடைத்து வைத்த இந்த பட்டையை போட்டுக் கொள்ள வேண்டும்.

3: இவற்றுடன் சிறிதளவு கிராம்பு ஒரு ஸ்பூன் ஓமம் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4: பின்பு இவற்றுடன் நான்கு அல்லது ஐந்து பல் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5: இவற்றையெல்லாம் நன்கு இடித்து கொள்ள வேண்டும்.

6: பின்பு ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 50 ml நல்லெண்ணெய் மற்றும் 25 ml வேப்ப எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7: பிறகு இதில் நாம் இடித்து பொடியாக்கி வைத்திருந்த அந்த பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8: இவற்றை ஒரு பத்து நிமிடம் திறந்து கொதிக்க விட வேண்டும்.

9: பிறகு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து ஆரிய பின்பு அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு உங்களுக்கு எங்கெல்லாம் வலி ஏற்படுகின்றதோ அந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் கை கால் மூட்டு வலி அனைத்தும் நீங்கிவிடும்.

 

Previous articleபாசி படிந்த மஞ்சை பற்களாக இருந்தாலும்!! ஒரே நிமிடத்தில் வெள்ளையாகி விடும்!!
Next articleபித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!