இந்த ஒரு பேஸ்ட் போதும் உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் அனைத்தும் அடியோடு நீங்க!!
நம் உடலில் அங்கங்கு சில கட்டிகள் திடீரென்று வரும். அதாவது கால்களில் கைகளில் மற்றும் உடலின் சில பாகங்களில் கட்டிகள் இருக்கும். இந்த கட்டிகள் உருவாகக் காரணம் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அதிகமாவது தான். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த கட்டிகள் நாளடைவில் பெரிதாக மாறி இதை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்துவிடும். அந்த அறுவை சிகிச்சை அளவுக்கு போகவிடாமல் அந்த கட்டிகளை நீக்க இந்த பதிவில் எளிமையான வீட்டு வைத்தியத்தை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்;
1. கொய்யா இலைகள் – நன்றாக பச்சையாக உள்ள இலைகள் சில
2. கற்றாலை ஜெல் – சிறிதளவு
3.மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை:
கொய்யா இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து உரல் அல்லது மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பிறகு கற்றாழை ஜெல்லையும், மஞ்சள் தூளையும் இத்துடன் சேர்த்து போஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டை உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் வைக்கவும். இதை தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து கட்டிகள் மறையும்.
கொய்யா இலைகளை ஏன் இதற்கு பயன்படுத்துகிறோம் என்றால் இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியாக்கள் தான் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகின்றது. இந்த கொய்யா இலைகள் நம் உடலில் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்புகள் வராமல் தடுக்க உதவுகின்றது. கொய்யா இலைகளில் கசாயம் செய்து குடிப்பதால் கூட கெட்ட கொழுப்புகள் வராமல் தடுக்கலாம்.
இதில் சேர்த்திருக்கும் கற்றாழை ஜெல் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றது. அது மட்டுமில்லாமல் அல்சர், தோல் நோய்கள் போன்ற பல நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
இறுதியாக சேர்த்த மஞ்சள் தூள் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள், கிருமிகளை வெளியேற்றுகின்றது. நம் தோலில் இருக்கும் கிருமிகளையும் மஞ்சள் தூள் நீக்குகின்றது.