உங்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த மூலிகை பொடி இருந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!
மனிதனாக பிறந்த ஒவ்வொருக்கும் ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.நல்ல அறிவாற்றல் கிடைக்க,மூளை சிறப்பாக செயல்பட ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய உலகில் பலர் ஞாபக மறதியால் அவதியடைந்து வருகின்றனர்.
முதுமை காலத்தில் சந்திக்க கூடிய நோய்களில் ஒன்று ஞாபக மறதி.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினர் பலர் ஞாபக மறதியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இழந்த ஞாபக சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம்
2)சீந்தில் பொடி
3)சுக்கு
4)வசம்பு
5)பனங்கற்கண்டு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு துண்டு சுக்கு,ஒரு துண்டு வசம்பு சேர்த்து லேசான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.அதன் பிறகு சீந்தில் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.அரைத்த பொடியை இதில் போட்டு மிதமான தீயில் காய்ச்சிக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.இவ்வாறு தினமும் குடித்து வந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)துளசி இலை பொடி
2)வல்லாரை இலை பொடி
3)அதிமதுர பொடி
4)வசம்பு பொடி
5)ஓமம்
6)இந்துப்பு
7)மஞ்சள் தூள்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி துளசி பொடி,1/2 தேக்கரண்டி வல்லாரை பொடி,1/4 தேக்கரண்டி அதிமதுர பொடி,1/4 தேக்கரண்டி வசம்பு பொடி,1/4 தேக்கரண்டி ஓமம்,சிறிது இந்துப்பு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து ,மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் குடித்து வந்தால் ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.