Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Parthipan K

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

கனவு என்பது எல்லா நேரங்களிலும் நமக்கு பலிப்பது கிடையாது. ஒரு சில கனவுகள் மட்டுமே சில விஷயங்களை நமக்கு குழப்பி விட்டு சென்றுவிடும். சில கனவுகள் எழுந்ததும் நமக்கு மறந்து போய் விடுகிறது. ஆனால் சில கனவுகளோ எழுந்தும் அப்படியே நினைவில் மறக்காமல் அப்படியே நிற்கும்.

இப்படி பலவிதமான கனவுகளில் பாம்பை கனவில் காண்பது அபசகுனமா? அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் ஏன் நம் கனவில் வருகிறது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

பாம்பு கனவில் பல்வேறு வகைகளாக நமக்கு காட்சி அளிக்கிறது. சாதாரண பாம்பு கனவில் காண்பது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஆனால் நல்ல பாம்பு படம் எடுப்பது போல கனவு வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல! அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொதுவாக பாம்பு நம் கனவில் வந்தால் பலருக்கும் ஒரு விதமான பதட்டம் உண்டாகிறது. பாம்பை கனவில் காண்பது என்பது முற்றிலுமாக அபசகுணம் அல்ல! நல்ல பாம்பு கொத்த வருவது போல கனவு காண்பது அல்லது உங்களை அது விரட்டிக் கொண்டு துரத்துவது போல கனவு காண்பது தோஷத்தை குறிக்கிறது.

நாக தோஷம் இருப்பவர்களுக்கு இது போல திடீரென கனவுகள் வருவது இயல்பானது. முன் ஜென்மத்தில் நீங்கள் பாம்பை அடித்து இருப்பீர்கள் அல்லது துன்புறுத்தி இருப்பீர்கள் இதனால் நாக தோஷம் உண்டாகிறது. இதை நாக தோஷ பரிகாரம் செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நாக தோஷம் இருப்பவர்கள் அவர் வீடுகளில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் நடக்கும். எனவே இரு பாம்புகள் பின்னிக் கொண்டு இருப்பது போல கோவிலில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அங்கு மஞ்சள், குங்குமம் வைத்து பாலும், முட்டையும் ஊற்றி பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து அந்த பாம்புகளை போல ஒன்றுடன் ஒன்றாக அன்னோனியமாக பின்னிப் பிணைந்து ஒற்றுமையுடன் இருப்பீர்கள்.

சாதாரண பாம்புகளை விட நாகப்பாம்புகள், ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உங்கள் கனவில் தோன்றினால் அஷ்ட லட்சுமிகளின் ஆசீர்வாதம் இருப்பதாக சகுன சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்ல பாம்பு கனவில் வந்தால் மகாலட்சுமியை குறிக்கிறது.

மகா விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் இந்த பாம்பு படுக்கை நமக்கு நல்லதை மட்டுமே செய்யக்கூடியது. எனவே பாம்பு உங்களை எதுவும் கனவில் செய்யாமல், பயமுறுத்தாமல் உங்கள் முன் வந்து விட்டு சென்றால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.

நல்ல பாம்பு படம் எடுத்து உங்கள் முன் நிற்பது போல கனவில் வந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கிறது என்று அர்த்தம். எனவே அடுத்த ஆறு மாதத்திற்குள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் வந்து சேர இருக்கிறது. அதுவே ஒன்றுக்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் உங்கள் கனவில் வந்தால் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைத்து செல்வ வளம் அதிகரிக்க போகிறது.

இதனால் உங்களுடைய தொழிலில் நல்ல லாபத்தை காணலாம். வருமானம் பெருகலாம், புதிய வாய்ப்புகள் பெறலாம் அல்லது வீடு கட்டும் யோகம் என்று சொத்துக்கள் பெருகுவதற்கான ஏதாவது ஒரு அமைப்பை உருவாக்கி கொடுக்கும். எனவே நாகம் கனவில் வந்தால் இனியும் பயப்பட வேண்டாம் நல்லதே நடக்கும்.