நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

0
252

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு வந்து விடுமோ என்ற பயமும் நம்மில் பலருக்கும் உண்டு.

தினசரி காலையில் பாலுடன் துளசி இலைகள், பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் சுவாசத்தை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். துளசி இலை சாப்பிடுவதால் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது.

துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. துளசியை மென்று சாப்பிடுவதை விட பாலுடன் சேர்த்து குடிக்கும் போது, அதன் மருத்துவ பண்புகள் தூண்டப்படுகின்றன. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

துளசி சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்து இதயம் சீராக துடிக்க உதவி செய்கிறது. பால் இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. இதனாலேயே அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். இதனை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இந்தப் பாலை தினமும் குடித்து வரலாம்.

Previous articleஅடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 
Next articleKanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here