உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இந்த ஒரு பொருள் இருந்தால் சருமம் பொலிவு பெறும்!!

Photo of author

By Rupa

முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு குறைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் பருக்கள்,அழுக்குகள்,கட்டிகள் உருவாகி தொந்தரவுகளை கொடுத்துவிடும்.இந்த எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது.

1)கற்றாழை ஜெல்

பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து க்ரீம் பதத்திற்கு கலந்துவிடவும்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

1)கடலை மாவு
2)கஸ்தூரி மஞ்சள் தூள்

ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை ஒரு பவுலில் கொட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யவும்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இப்படி செய்வதால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

1)சந்தனம்
2)ரோஸ் வாட்டர்

ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை இரவில் முகத்திற்கு அப்ளை செய்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.

1)பச்சை பயறு மாவு
2)மஞ்சள் தூள்
3)ரோஸ் வாட்டர்

ஒரு பவுலில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு மாவு,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை முகத்திற்கு அப்ளை செய்யவும்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.