கை கால் மற்றும் மூட்டு வலி இருக்கின்றதா? இதோ அதற்கான நிரந்தர தீர்வு!
நீண்ட நாள் மூட்டு வலி, இடுப்பு வலி ,கழுத்து வலி ஆகியவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலம் காணலாம்.
மூட்டு வலி, கழுத்து வலி, கை கால் வலி போன்ற பிரச்சனைகள் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சரியான உணவு முறைகளை எடுக்க தவறுவதன் காரணமாக எலும்பு வலு இழந்து கை கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதனை சரி செய்து கொள்ள இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அயன் சத்து நிறைந்த பொருட்கள் தினசரி உணவுகளுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி காலை நேரங்களில் 15 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நடை பயிற்சி அல்லது சூரிய வெளிச்சம் நம் உடல் மீது படுவதன் காரணமாக விட்டமின் டி அதிகரிக்க உதவுகிறது.
மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதன் செய்முறைகளை தற்போது காணலாம்.
சிறிய அளவுள்ள பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் மற்றும் அதனுடன் ஒரு ஸ்பூன் சுக்குப்பொடி இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதனுடன் அரை டீஸ்பூன் ஓமம் பொடி மற்றும் இதனுடன் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி பொடி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி தினசரி காலை நேரங்களில் இதனை குடித்து வருவதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எலும்பு பிரச்சனை கை கால் வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.