உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க!!

0
106

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல் இருக்கா… மஞ்சள், பால், மிளகு மூன்றையும் இப்படி பண்ணி பாருங்க…

 

தொடர்ச்சியான இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த வைத்திய முறை பின்பற்றி பாருங்கள். பின்னர் உங்களுக்கு இருமல் என்பது இருக்காது.

 

தொடர்ச்சியாக இருமல் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்த விடுபடுவதற்கு பல மருந்துகள், மாத்திரைகள் எடுத்தும் பலன் இல்லாமல் இருந்தால் இந்த வைத்தியமுறையை பின்பற்றுங்கள். இருமல் இருந்த இடம் தெரியாமல் தானாக மறைந்து போகும்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* மஞ்சள் தூள்

* பால்

* மிளகுப் பொடி

 

செய்முறை…

 

ஒரு டம்ளர் பாலை எடுத்து நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத்தூள் இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இளஞ்சூடாக ஆறியதும் இதை குடிக்கலாம்.

 

இந்த முறையை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இதை குடித்து வந்தால் இருமல் மட்டுமில்லாமல் சளியும் பறந்து ஓடி விடும்.

 

மஞ்சள் பொடியில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில் உள்ளது. மஞ்சள் பொடி நமது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து வெளியேற்றுகின்றது.

 

மஞ்சளைப் போலவே மிளகுப் பொடியிலும் அதிகளவு சக்திகள் உள்ளது. மிளகு உடலில் ஏற்படும் வாயுத் தொல்லையை நீக்கும். சளியை விரைவாக குணப்படுத்தும்.

 

மிளகு பொடியின் காரமும், மஞ்சள் பொடியின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் ஒன்றாக சேரும் பொழுது உடலில் பல நன்மைகளை அளிக்கின்றது.

Previous articleடெங்கு காய்ச்சல் வந்துவிட்டதா… பயப்படாதீர்கள்… இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்… சரி செய்து விடலாம்!!
Next articleஉங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க!!