உங்களுக்கு பைல்ஸ் இருக்கா? எச்சரிக்கை.. இந்த உணவுகள் எமனாக மாறலாம்!!

Photo of author

By Divya

உங்களுக்கு பைல்ஸ் இருக்கா? எச்சரிக்கை.. இந்த உணவுகள் எமனாக மாறலாம்!!

Divya

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் நோய் என்று சொல்கின்றோம்.இந்த மூல நோய் வந்தால் மலத்தை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும்.சில நேரம் இரத்தம் கலந்த மலம் வெளியேறும்.ஆசனவாய் புண்களால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படும்.இந்த பைல்ஸ் பாதிப்பு வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

செரிமானப் பிரச்சனை
மலம் அடக்கி வைத்தல்
ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்

பைல்ஸ் பாதிப்பு அறிகுறிகள்:

ஆசனவாய் பகுதியில் அரிப்பு
ஆசனவாய் எரிச்சல்
மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வருதல்
மலம் கழிப்பதில் சிரமம்

பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

அதிக காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள்,கத்தரிக்காய்,அவரைக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுபடுத்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

பைல்ஸ் பாதிப்பை குணப்படுத்தும் உணவுகள்:-

துத்திக் கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.பப்பாளி,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம்.

புரதம் நிறைந்த பால்,முட்டை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

மூலத்திற்கு வீட்டு வைத்தியம்:

1)துத்தி கீரை
2)சின்ன வெங்காயம்
3)நல்லெண்ணெய்
4)உப்பு

முதலில் சிறிதளவு துத்தி கீரையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அடுத்து 10 சின்ன வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து சுத்தப்படுத்தி வைத்துள்ள துத்தி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.