உங்களுக்கு முன்கூட்டியே விந்து தள்ளுதல் பிரச்சனை இருக்கா? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகுங்கள்!

Photo of author

By Rupa

பாலியல் உறவில் முன்கூட்டியே விந்து தள்ளல் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.இளம் வயது ஆண்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே விந்து வெளியேறிவிடுவதால் துணையை திருப்திப்படுத்த முடியவில்லை என்ற வேதனையை பல ஆண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இதனால் ஆண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதோடு தம்பதியர் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கிவிடுகிறது.29% ஆண்கள் இந்த முன்கூட்டியே விந்துதள்ளல் பிரச்சனையால் அவதியடைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

முன்கூட்டியே விந்துதள்ளல் பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

அஸ்வகந்தா

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் பால் ஊற்றி காய்ச்சவும்.இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அஸ்வகந்தா பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடித்தால் விந்துதள்ளல் தவிர்க்கப்படும்.

பாதாம் பவுடர்
தேன்
பால்

ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பவுடர் மற்றும் தேவையான அளவு தேன் கலந்து குடித்து வந்தால் முன்கூட்டியே விந்துதள்ளல் ஏற்படுவது கட்டுப்படும்.

பூண்டு
பால்

ஒரு கிளாஸ் அளவு பாலில் ஒரு பல் பூண்டை நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் முன்கூட்டியே விந்துதள்ளல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வெங்காய விதை

ஒரு தேக்கரண்டி வெங்காய விதையை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் முன்கூட்டியே விந்துதள்ளல் பிரச்சனை கட்டுப்படும்.