நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!
வீடு என்றாலே பூஜை அறை என்பது கட்டாயமாக இருக்கும். அவ்வாறான பூஜை அறையில் சாமி படங்களை எவ்வாறு மாட்ட கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். தனி பூஜை அறை அல்லது வீட்டில் எந்த இடத்தில் சாமி படங்கள் வைத்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் இடையிலும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். சாமி படங்களை இடைவெளி இல்லாமல் வைத்திருந்தால் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
அதன் பிறகு சாமி சிலைகள் அல்லது சாமி படத்திற்கு பூக்கள் வைக்கும் பொழுது சாமியின் முகம் மறையும் அளவிற்கு வைக்கக் கூடாது. சாமி படங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு போன்றவற்றை வைக்கக் கூடாது. சந்தனம் அல்லது மஞ்சள் குங்குமம் தான் வைக்க வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை அன்று சாமி படங்களை சுத்தம் செய்யக்கூடாது.