கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

Divya

அடிக்கடி கை கால் வலி,குடைச்சல் இருந்தால் புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம் ஆகியவற்றை கொண்டு தீர்வு காணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1.புதினா உப்பு – 20 கிராம்
2.ஓம உப்பு – 20 கிராம்
3.பச்சை கற்பூரம் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ள வேண்டும்.

2)நாட்டு மருந்து கடையில் இந்த மூன்று பொருளும் கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கி அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

3)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகிய மூன்று பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும்.இந்த மூன்று பொருளையும் தலா 20 கிராம் அளவிற்கு எடுத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடிக் கொள்ள வேண்டும்.

4)பின்னர் இதை 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குலுக்க வேண்டும்.இப்படி செய்தால் மூன்று பொருளும் திரவமாகிவிடும்.

5)இந்த திரவத்தை கை கால் வலி பாதிப்பு குணமாகும்.இந்த மூன்று பொருள் சேர்த்த திரவம் உடல் வலியை குணப்படுத்துகிறது.வாரம் ஒருமுறை இந்த திரவத்தை உடலில் அப்ளை செய்து வந்தால் வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1.தேங்காய் எண்ணெய் – 20 மில்லி
2.பச்சை கற்பூரம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1)அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து 20 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

2)அடுத்து ஒரு தேக்கரண்டி பச்சை கற்பூரத்தை அதில் போட்டு சூடுபடுத்த வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து உடலில் தடவி மசாஜ் செய்தால் வலி தானாக குறையும்.கை கால் வலி,குடைச்சல்,மூட்டு வலி போன்றவை குணமாக இதை பயன்படுத்தலாம்.