வாய் அல்சர் இருப்பவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்தால் ஒரே நாளில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
தீர்வு 01:
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
சிறிதளவு தண்ணீர்
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை வாய்ப்புண் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
தீர்வு 02:
கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
ஒரு கிளாஸ் தண்ணீர்
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த நீரை பருகினால் வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும்.
தீர்வு 03:
ஒரு தேக்கரண்டி கசகசா
ஒரு கப் தேங்காய் பால்
முதலில் ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தேங்காய் பாலில் ஒரு தேக்கரண்டி கசகசா போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 04:
ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி கீரை பொடி
ஒரு கிளாஸ் தேங்காய் பால்
மணத்தக்காளி கீரையை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாலில் மணத்தக்காளி கீரை பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 05:
ஒரு தேக்கரண்டி சுண்டக்காய் வற்றல்
ஒரு கிளாஸ் மோர்
முதலில் சுண்டக்காய் வற்றலை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிளாசில் மோர் ஊற்றி அரைத்த சுண்டைக்காய் பொடியை மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இப்படி வாரத்தில் மூன்று தினங்கள் பருகி வந்தால் வாய்ப்புண் பாதிப்பு குணமாகும்.