புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

Photo of author

By Divya

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

Divya

மோசமான உணவுகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு புளித்த ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)கீழாநெல்லி பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கீழாநெல்லி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றையும் 50 கிராம் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.இந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி கீழாநெல்லி பொடி போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை உணவு உட்கொள்வதற்கு முன் குடித்தால் புளித்த ஏப்பம்,அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உணவு உட்கொள்வதற்கு முன் இந்த பானத்தை குடிப்பதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் நீங்கள் உணவு உட்கொண்ட பின்னர் இதனை குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
2)சீரகப் பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

வேப்பம் பூவை வெயிலில் காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் சீரகத்தை லேசாக வறுத்து பவுடராக அரைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த வேப்பம் பூ பொடி மற்றும் சீரகப் பொடி போட்டு காய்ச்ச வேண்டும்.இந்த பானத்தை வடித்து குடித்தால் புளித்த ஏப்பம்,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் புளித்த ஏப்பம் சரியாகும்.செரிமானப் பிரச்சனையை சரி செய்யலாம்.