உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

Photo of author

By Divya

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!

Divya

கோடை காலத்தில் நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது.இதனால் வியர்க்குரு கொப்பளம் உருவாகி அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.உடலில் உருவாகி இருக்கும் வியர்க்குரு கொப்பளங்கள்,வேனல் கட்டிகள் மறைய சில மூலிகை பொருட்களை பவுடராக மாற்றி தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் கிழங்கு
3)திரிபலா பொடி
4)படிகாரத் தூள்
5)குப்பைமேனி இலை
6)துளசி இலை

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலை,அரை கைப்பிடி குப்பைமேனி இலை,அரை கைப்பிடி துளசி இலைகளை நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இவை அனைத்தையும் ஒரு சல்லடையில் கொட்டி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 50 கிராம் திரிபலா பொடி,20 கிராம் படிகாரத் தூளை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடி தேவையான அளவு கொட்டி தண்ணீர் விட்டு கட்டிபடாமல் கலக்க வேண்டும்.பிறகு இதை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வியர்க்குரு கொப்பளம் மறையும்.

சரும எரிச்சல் குணமாக,சரும வியாதிகள் அண்டாமல் இருக்க இந்த பொடியை கலந்து குளிக்கலாம்.உடலில் வியர்வை சேராமல் இருக்க வியர்வை துர்நாற்றம் நீங்க இந்த பொடியை பூசி குளிக்கலாம்.