TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Photo of author

By Divya

TEA-இல் ரஸ்க் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Divya

ரொட்டி மாவை பேக் செய்து தயாரிக்கப்படும் ரஸ்க் இந்தியாவில் பேமஸான டீ ஸ்னாக்ஸாக உள்ளது.இந்த ரஸ்க் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் இதில் குறைவான அளவே ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.இந்த ரஸ்கில் அதிகளவு கலோரி இருப்பதால் இதை அடிக்கடி உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.

நாம் சாப்பிடும் ரஸ்கில் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த ரஸ்க்கை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.அடிக்கடி ரஸ்க் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.

ரஸ்கில் குறைவான அளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதை சாப்பிடும் பொழுது செரிமானப் பிரச்சனை,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.தினமும் ரஸ்க் சாப்பிட்டால் இரத்தக் குழாயில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.

அளவிற்கு அதிகமாக ரஸ்க் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.அதேபோல் உடலில் அதிகளவு கெட்ட கழிவுகள் தேங்கிவிடும்.அளவிற்கு அதிகமாக ரஸ்க் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் தினமும் ரஸ்க் சாப்பிட்டால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்ந்துவிடும்.

ரஸ்க் ஒரு பதப்படுத்தப்படும் உணவு என்பதால் அதை உட்கொள்ளும் பொழுது நமது எந்த ஊட்டசத்துக்களும் கிடைக்காது.காலை நேரத்தில் ரஸ்க் போன்ற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட்டால் வயிறு உப்பசம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சில ரஸ்கில் ஏலக்காய்,பால் போன்றவை சேர்க்கப்படுகிறது.இதுபோன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் ரஸ்க் ஒரு ஆரோக்கியம் இல்லாத உணவுப் பொருளாகவே கருதப்படுகிறது.ஆகவே இனி அடிக்கடி ரஸ்க் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.