நமது சுவாச உறுப்பான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.நுரையீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.நுரையீரல் ஆரோக்கியமற்றதாக மாற நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம்.
நுரையீரல் ஆரோக்கியம் கெட காரணங்கள்:
1)புகைப்பிடித்தல்
2)காற்று மாசுபாடு
3)ஆஸ்துமா
4)சைனஸ்
5)சளி
6)நுரையீரல் நோய்
நுரையீரல் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
1)உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால் நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது என்று அர்த்தம்.
2)மார்பு பகுதியில் வலி அதிகமாக இருந்தால் அவை நுரையீரல் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
3)தொடர் இருமல் பாதிப்பு நுரையீரல் தொற்றை உறுதி செய்கிறது.உங்களுக்கு இடைவிடாத இருமல் பிரச்சனை இருந்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
4)இரும்பும் பொழுது இரத்தம் வந்தால் அவை நுரையீரல் நோய் தொற்று இருப்பதை உணர்த்துகிறது.
5)அடிக்கடி மார்பு தொற்று பிரச்சனை ஏற்பட்டால் நுரையீரல் சேதமாகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
6)தும்மல்,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்ப்பட்டால் நுரையீரல் தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
7)நடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படுதல்,நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய இயலாமை போன்ற காரணங்கள் நுரையீரல் சேதத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.
8)மார்பு இறுக்கம்,சரியாக சுவாசிக்க முடியாமல் போதல் போன்ற பிரச்சனை நுரையீரல் சேதத்தை குறிக்கிறது.
நுரையீரல் சேதமாகாமல் இருக்க செய்ய வேண்டியவை:
**புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
**வெளியில் செல்லும் பொழுது மாஸ்க் அணிய வேண்டும்.
**வெளியில் சென்று வந்த பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
**மூலிகை பானங்களை அருந்தி நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நுரையீரல் பாதிப்பு தீவிரமாக இருந்தால் சளி பரிசோதனை,எக்ஸ் கதிர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.