உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? அப்போ இரத்த புற்றுநோய் இருக்கு!

Photo of author

By Rupa

உலகில் உள்ள நோய்களில் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்கள் உருவாகும் இடத்தை பொறுத்துவரை அமையும். இந1த புற்றுநோய்களில் இரத்த புற்றுநோயும் ஒன்றாகும்.

இந்த இரத்த புற்றுநோய் என்பது இரத்தத்தில் உள்ள திசுக்களில் புற்றுநோய் செல்கள் உருவாவதால் ஏற்படுகின்றது. இரத்த புற்றுநோய் லுகேமியா, மைலோமா, லிம்போமா என மூன்று வகைப்படும்.

லுகேமியா புற்றுநோயானது எலும்பு மஜ்ஜையில் தோன்றி அதிகப்படியான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு வழி வகுக்கின்றது. லிம்போமா புற்றுநோய் உடலில் உள்ள நிணநீர் மண்டலத்தில் உருவாகின்றது. மைலோமா புற்றுநோயானது எலும்பு மஜ்ஜையில் இருக்கும் பிளாஸ்மா செல்களில் உருவாகின்றது.

இந்த புற்று நோய்கள் உருவாவதற்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றது. ஏற்கனவே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்படும். சுற்றுபுறச் சூழல் காரணமாகவும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

மரபியல் ரீதியாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை முறையும் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அந்த வகையில் இரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கான சில அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இரத்தப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள்…

* திடீரென்று உடல் எடை குறையும். அதாவது நாம் உடல் எடையை குறைக்க எந்தவொரு முயற்சியும் செய்யாத பொழுது திடீரென்று உடல் எடை குறையும்.

* நமக்கு தொடர்ச்சியாக உடல் சோர்வு இருக்கும். உடலில் பலவீனம் இருக்கும். இவ்வாறு இருந்தால் இரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முக்கிய காரணமாகும். மேலும் அடிக்கடி நோய்த் தொற்றுகளை எற்பட்டுக் கொண்டிருந்தால் இரத்தப் புற்றுநோய் இருக்கலாம்.

* கழுத்து, அக்குள், இடுப்புப் பகுதிகளில் இருக்கும் நிணநீர் கணுக்கள் வலியில்லாமல் வீக்கத்துடன் காணப்பட்டால் அது லிம்போமா வலையின் அறிகுறியாகும்.

* மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படும் அல்லது பல் ஈறுகளில் இரத்தப் போக்கு ஏற்பட்டால் அது இரத்தப் புற்றுநோய் அறிகுறியாகும்.

* அடிக்கடி எலும்புகளில் வலி ஏற்படும். இது இரத்தப் புற்றுநோய்கான அறிகுறியாகும். மேலும் இது மைலோமாவின் அறிகுறியாகும்.

* தொடர்ந்து தீவிர காய்ச்சல் ஏற்படும். மேலும் இரவு நேரத்தில் தொடர்ச்சியாக வியர்வை ஏற்பட்டால் இரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.