இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்! கட்டாயம் பக்கவாதம் இருதயநோய் ஏற்படும்!
வளர்ந்து வரும் காலகட்டத்தில் தற்பொழுது சிறு வயதினருக்கு பக்கவாதம் இருதய நோய் ஏற்பட்டு விடுகிறது. நாளடைவில் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் இருதய நோயால் தன்னுயிரை இழந்து வருகின்றனர். மாறுபட்ட உணவுப் பழக்கத்தினாலும் கால சூழ்நிலை நாளும் இந்நிலைக்கு தற்பொழுதும் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஒரு உடலில் இரத்த அழுத்தமானது சீராக இருக்க வேண்டும். மாறாக ரத்த அழுத்தம் உயர்வாக இருந்தாலும் சரி அல்லது ரத்த அழுத்தம் குறைவாக காணப்பட்டாலும் சரி அது பெரும் சிக்கலில் தள்ளி விடும். உங்கள் இருதயம் எந்த அளவிற்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது மற்றும் உங்கள் தமனிகள் குறுகலாக இருந்தால் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பிற்கு தள்ளப்படுவீர்கள்.
இந்த ரத்த அழுத்தமானது உடலில் எந்தவித அறிகுறியும் காட்டாது.அவ்வாறு அறிகுறிகள் காட்டாமல் இருப்பதால் அது நாளடைவில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் நிலைக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனர்.இதனால் அனைவரும் ரத்த அழுத்தம் முறைப்படி உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு சோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தத் துறை சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் சில உடற்பயிற்சிகலாளும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். உடல் பருமன் அதிகரிப்பினாளும், தொடர்ந்து மது மற்றும் புகை பிடிப்பதினாலும்,உட்கார்ந்த படியே வேலை செய்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது ஆகியவை உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர்.உலக மக்கள் மத்தியில் சைலண்டாக மக்களை கொல்லும் கொலையாளி என்றும் இந்த ரத்த அழுத்தத்தை கூறுகின்றனர்.மேலும் இந்த ரத்த அழுத்தத்தை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர்.
முதல் நிலை உயர் ரத்த அழுத்தம்:
இந்த இரத்த அழுத்தமானது மரபணு அல்லது புகைப்பிடித்தல், மது அருந்துதல், எடை அதிகரித்தல் ஆகியவற்றால் 90% ஏற்படும் என்று கூறுகின்றனர்.
இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்:
இந்த ரத்த அழுத்தமானது உடலில் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் அதிகளவு கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது மற்றும் என்டோகிரைன் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிக அளவு இஞ்சி எடுத்துக்கொண்டு உட்கொள்ளும் பொழுது ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும் என கூறுகின்றனர்.