உடலில் இந்த பிரச்சனை இருக்கா? நீங்கள் ஆரஞ்சு பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

உடலில் இந்த பிரச்சனை இருக்கா? நீங்கள் ஆரஞ்சு பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!!

Divya

நம் இந்தியாவில் அதிகம் விளையும் பழமான ஆரஞ்சு அனைவரும் விரும்பக் கூடிய பழமாகும்.வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ்,ஐஸ்க்ரீம்,கேக் என்று பல இனிப்பு உணவுகள் செய்து ருசிக்கப்படுகிறது.

ஆரஞ்சு பழ ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின் ஏ
2)வைட்டமின் சி
3)வைட்டமின் பி
4)கால்சியம்
5)பொட்டாசியம
6)மெக்னீசியம்
7)பாஸ்பரஸ்

ஆரஞ்சு பழ நன்மைகள்:

1.உடல் உஷ்ணத்தை குறைக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது.இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

2.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

3.குடல் இயக்கத்தை சீராக வைக்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

4.சிறுநீர் கடுப்பு பிரச்சனை சரியாக ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடலாம்.பக்கவாதம்,கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஆரஞ்சு பழம் சாப்பிட்டு சரி செய்யலாம்.

5.உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் செய்து பருகலாம்.ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க முடியும்.

6.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

ஆரஞ்சு பழத்தை யார் சாப்பிடக் கூடாது?

1.செரிமானப் பிரச்சனை இருபவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடக் கூடாது.வயிற்றுப்போக்கு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2.திடீர் வயிற்று வலி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை தவிர்க்க வேண்டும்.நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

3.கேவிட்டி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை தவிர்க்க வேண்டும்.வயிறு எரிச்சல்,அல்சர் இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடக் கூடாது.

ஆரஞ்சு பழம் சாப்பிட உகந்த நேரம்:

காலை மற்றும் இரவு நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு சிட்ரஸ் பழம் என்பதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

அதேபோல் இரவு நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.நாளொன்றில் இரண்டு அல்லது மூன்று ஆரஞ்சு பழம் மட்டுமே சாப்பிட வேண்டும்.அளவிற்கு அதிகமாக ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வயிற்றில் அமில அளவு அதிகரித்துவிடும்.