உங்கள் நகங்களில் இந்த அறிகுறி தென்படுகிறதா?? அப்படியானால் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்!!!

உங்கள் நகங்களில் இந்த அறிகுறி தென்படுகிறதா?? அப்படியானால் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

நமது உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. நமது நோய்களுக்கான அறிகுறிகளை நமது முகம், தோல் ,நகங்கள் ஆகியவற்றின் மூலமாக கண்டறியலாம். நமது முகம் தோல் மற்றும் நகங்கள் ஆகியவற்றில் காணப்படும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நமக்கு சத்து குறைபாடு அல்லது உடலில் நோய் வருவதற்கான அறிகுறியை நமக்கு காட்டலாம்.

நமது உடலுக்கு தேவையான முக்கிய தனிமங்களில் ஒன்று இரும்பு.சத்து குறைபாடு நமது முடி, தோல் நகங்களில் நமக்குத் தெரியும். நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இரும்பு முக்கியமானது. நமது ரத்தத்தில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வது இரும்பு. இது உடலில் இருந்து ஆக்சிஜனை மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மயோகுளோபினை உருவாக்கும். தசைப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதோடு, சில ஹார்மோன்களை உருவாக்கும் செயல்முறைகளிலும் பங்கு வகிக்கிறது.

ஒருவருக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கும் பொழுது அவர்களுக்கு சோர்வு பலகீனம் ,நாக்கு,மற்றும் மார்பில் வலி புண்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடலானது அதன் பணியை செய்ய போதுமான அளவு இரும்புச்சத்து குறைவது இரும்புச்சத்து குறைபாடு ஆகும். பெரும்பாலும் இரும்பு சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 50% இரும்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படலாம்.

பொதுவாக இரும்புச்சத்து குறைபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவில் இரும்பு சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது மற்றும் நமது உடல் இரும்பு சத்துகளை கிரகிப்பது, அதிகளவு ரத்த இழப்பு போன்ற காரணங்களால் உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படலாம். இதனால் பலகீனமான வேகமான இதயத் துடிப்பு, நாக்கில் வலி போன்றவை ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு நமது சருமம் மற்றும் நகங்களில் நன்றாகத் தெரியும்.

முடிகளில் இரும்பு சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் நன்றாகவே தெரியும். உலர்ந்த மற்றும் சேதம் அடைந்த முடி இதன் அறிகுறியாக இருக்கலாம். ஒரு நாளில் சில முடிகள் உதிர்வது சாதாரணமானது ஆனால் அதிக அளவு முடி உதவு உங்கள் உடலில் இரும்பு சத்து குறைபாட்டை குறைக்கிறது. இரும்பு சத்து குறைபாடு இருந்தால் அது நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும் குறைக்கிறது. ஹீமோகுளோபின் குறைவினால் முடிகள் குறைந்த அளவு ஆக்சிஜனை பெறுகின்றன. இதனால் முடிகள் சேதம் அடைகின்றன. தோல் மற்றும் முடிகள் தேவையான அளவு ஆக்சிஜனை பெற தவறினால் அவை பலகீனம் அடைகின்றன.

உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் தோல் முடி மற்றும் நகங்களுக்கு, வளர்ச்சி தூண்டும் உயிரணுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் பணி கடினம் ஆகிறது. இதனால் தலைமுடி உதிர்ந்து மெலிந்து விடலாம். முடி உதிர்தல் இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஒரு முக்கியமான பொதுவான பிரச்சனையாகும்.

ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் இருந்து ரத்தம் ஆனது அதன் சிவப்பு நிறத்தை பெறுகிறது. ரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு கம்மியாக இருந்தால் அது ஹீமோகுளோபின் அளவையும் பாதிக்கிறது இதனால் தோல் வெளிறிய நிறத்தில், வெப்பத்தை இழக்கிறது.

கொய்லோனிச்சியா, எனப்படும் உடைந்த அல்லது பலவீனமான நகங்கள், இரும்புச்சத்து குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும். இதனால் நகங்கள் உடையக்கூடியதாக தொடங்குகிறது. இதனால் நகங்கள் எளிதில் விரிசல் அடையலாம் உடையலாம். நீண்ட நாட்களுக்கு இரும்பு சத்து குறைபாட்டினை களையாமல் விடும் பொழுது அவை ஸ்பூன் வடிவ நகங்களுக்கு வழி வகுக்கலாம். அவை வளைவை உருவாக்கி நடுவில் தோய்த்து, விளிம்புகள் வட்டமான ஸ்பூன் வடிவில் தோன்றலாம். இது மிகவும் அரிதான அறிகுறி. இரும்பு சத்து குறைபாட்டின் மிகவும் கடுமையான நிகழ்வுகளில் மட்டுமே இது நடக்கிறது.

Leave a Comment