தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் ஒரு பட்டாம் பூச்சி வடிவ சுரப்பியாகும் நமது உடலில் மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் இயங்குவதற்க்கு தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. இந்த தைராய்டு சுரப்பியானது சாதாரணமாக சுரக்கும் போது எந்த வித பிரச்சினையும் இல்லை.
இது குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ சுரக்கும் போது தைராய்டு நோய் உண்டாகிறது. இந்த தைராய்டு பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது. பெண்களுக்கு உண்டாகும் தைராய்டினால், PCOD, நீர்க்கட்டி, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் உண்டாகிறது.
சிறு பெண் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதோடு, மனதையும் பாதிக்கிறது. தைராய்டு அதிகமாக சுரப்பதை ஹைபர் தைராய்டு, குறைவாக சுரப்பதை ஹைபோ தைராய்டு என்று கூறப்படுகிறது. எந்த வகையான தைராய்டாக இருந்தாலும் அதற்கு நிரந்தரமான ஒரு தீர்வினை காணலாம்.
சீரகம் 50 கிராம், மல்லி விதைகள் 50 கிராம், 2 ஸ்பூன் மிளகு இவற்றை எல்லாம் வாணலியில் போட்டு லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். இந்த பொடியை காலை மற்றும் மாலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து விடவும்.
இதை 1 வாரம் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சினையை குறைக்கலாம். மாத்திரைகள் எடுக்காத அளவிற்கு முழுமையாக குணமடைய 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இதை நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு தலை முடி உதிர்வது நிற்கும்,
உடல் எடை குறைய ஆரம்பிக்கும், தொண்டை வலி, எரிச்சல் போன்றவை நிற்க ஆரம்பிக்கும். இந்த பொடியை 48 நாட்கள் சாப்பிட்ட பிறகு தைராய்டு டெஸ்ட் எடுத்து பார்க்கும் போது உங்களுக்கு தைராய்டு நார்மல் ஆகி இருக்கும்.