சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலி உள்ளதா.. இதனை அரை மணி நேரத்தில் சரி செய்யலாம்!!
நம் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது உடலிற்குள் நீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்குகிறது.இதனால் உடல் வறட்சி,தோல் சுருக்கம்,சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக சிறுநீரக பாதையில் தொற்று,அழற்சி நீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் பிறப்புறுப்பை சுற்றி அதிக வலி,எரிச்சல்,அரிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.குறிப்பாக கோடை காலத்தில் நீர்க்கடுப்பு பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்தி கொள்ள முடியும்.
1)புளி
2)நாட்டு சர்க்கரை
ஒரு துண்டு புளியை ஒரு கிளாஸ் நீரில் போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற விட வேண்டும் .பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் கடுப்பு சரியாகும்.
1)பார்லி
2)தண்ணீர்
ஒரு கிண்ணம் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பார்லி சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.மறுநாள் இந்த நீரை பருகி வர சிறுநீர் கடுப்பு முழுமையாக குணமாகும்.
1)உளுந்து பருப்பு
2)தண்ணீர்
ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்தை கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விட வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு முழுமையாக குணமாகும்.
1)சீரகம்
2)தண்ணீர்
ஒரு தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.
1)இளநீர்
தினமும் ஒரு இளநீர் அருந்தி வந்தால் சிறுநீர் கடுப்பு,உடல் சூடு,நீர் வெளியேற்றம் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.